close
Choose your channels

அருண் விஜய் அடுத்த படம்.. 2 நாயகிகள், சிக்ஸ்பேக்கில் அதிரடி ஆக்சன்.. இயக்குனர் இவரா?

Thursday, April 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய் நடித்த ’வணங்கான்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருண் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் திருக்குமரன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’மான் கராத்தே’ மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’கெத்’து படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும் அருண் விஜய் திரையுலக வாழ்வில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஐந்து கெட்டப்புகள் இருப்பதாகவும் குறிப்பாக சிக்ஸ்பேக் உடல் அமைப்புடன் ஒரு சண்டை காட்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் நாயகியாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்த சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்த இருப்பதாகவும் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் கன்னட நடிகர் யோகேஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.