அருண் விஜய் பிறந்த நாளில் வெளியான சூப்பர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்:  இணையத்தில் வைரல்

  • IndiaGlitz, [Saturday,November 19 2022]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண்விஜய் நடித்து வரும் 'அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அருண்விஜய் நடித்த ’யானை’ மற்றும் ’சினம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து வருகிறார்

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அருண்விஜய் ஒரு பெண் குழந்தையுடன் இருப்பது போன்ற போஸ்டர் உள்பட 2 போஸ்டர் வெளியாகி உள்ளது

இன்று அருண்விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எனது மகள் சினிமாவில் நடிக்கின்றாரா? நடிகை ரோஜா விளக்கம்

நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்தி குறித்து நடிகை ரோஜா விளக்கமளித்துள்ளார்.

சன் டிவி 'ரோஜா' சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ரோஜா' சீரியலில் நடித்த நடிகை ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

அமீர்கான் மகள் திருமண நிச்சயதார்த்தம்.. கமல் குடும்பத்தில் இருந்து சென்றது யார் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகர் அமிர்கானின் மகள் நிச்சயதார்த்தத்திற்கு கமல் குடும்பத்தில் இருந்து ஒருவர் சென்றுள்ள தகவல் வெளியாகியுள்ளன.

'யசோதா' வெற்றியை கொண்டாடும் சமந்தா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்!

நடிகை சமந்தா நடித்த 'யசோதா' திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கர்ப்பம் குறித்த வதந்திக்கு விளக்கம் அளித்த நடிகை நிக்கி கல்ராணி!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் அதற்கு நிக்கி கல்ராணி விளக்கம் அளித்துள்ளார்.