close
Choose your channels

அமீர்கான் மகள் திருமண நிச்சயதார்த்தம்.. கமல் குடும்பத்தில் இருந்து சென்றது யார் தெரியுமா?

Saturday, November 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் அமிர்கானின் மகள் நிச்சயதார்த்தத்திற்கு கமல் குடும்பத்தில் இருந்து ஒருவர் சென்றுள்ள தகவல் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகள் இரா கான் மற்றும் நுபுர் ஷிக்கரே திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமீர்கானின் மகள் இரா கான் மற்றும் நுபுர் ஷிக்கரே ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இரு தரப்பு பெற்றோர் சம்மதத்துடன் இந்த நிச்சயதார்த்தம் மிகவும் சிறப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிச்சயதார்த்தத்தில் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் கலந்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அமீர்கான் மகள் இராகான் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர்கான் மகளின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.