'யானை' வெற்றியை அடுத்து அருண்விஜய்யின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுவா?

  • IndiaGlitz, [Tuesday,August 02 2022]

அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான 'யானை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தை ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் கொண்டாடினார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் அருண் விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் வெங்கடசலம் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’பார்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அரவிந்த் சந்திரசேகர் என்ற இன்டலிஜென்ட் அதிகாரி வேடத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் இந்த படத்தில் ரெஜினா நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

More News

நேரடி இந்தி படத்தில் நடிக்கின்றாரா சூர்யா? இயக்குனர் இந்த பிரபலமா?

சூர்யா நடிப்பில் பாலா இயக்கி வரும் 'வணங்கான்' என்ற படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் அவர் வரிசையாக பல பிரபல இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளதாக

'பொன்னியின் செல்வன்' பின்னணி இசை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த சர்வதேச பிரபலம்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன்

நான் 99% ஏஞ்சல், அந்த 1%??? செம கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சாயிஷா!

நடிகையும் பிரபல நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 99 சதவீத ஏஞ்சல் என்றும் அந்த ஒரு சதவீதம் என்று கேள்வி எழுப்பி பதிவு செய்துள்ள கிளாமர்

'புஷ்பா 2' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 38 வயது தேசிய விருது பெற்ற நடிகை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின்

சினிமா புரியாதவர்கள் தேசிய விருது கமிட்டியில் உள்ளனர்: பிரபல இயக்குனரின் சர்ச்சை பேச்சு!

சினிமா பற்றிய புரிதல் இல்லாதவர்கள் தான் தேசிய விருது கமிட்டியில் உள்ளனர் என்றும் அதனால்தான் விருதுக்கு தேர்ந்து எடுக்கும் படங்கள் தகுதியானதாக இல்லை என்றும் பிரபல இயக்குனர் ஒருவர்