சூர்யாவின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்!

  • IndiaGlitz, [Monday,December 14 2020]

தமிழ் சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் அறிமுகமாவது புதிதில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாரிசுகள் வரை திரையுலகில் அறிமுகமாகி தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்

அந்த வகையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் மகன் சூர்யாவின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்தாலும் ’என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய பிரேக்கை பெற்றவர் அருண் விஜய். தற்போது அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் தனது மகன் அர்னவ்விஜய் தற்போது சினிமாவில் நடிக்க உள்ளதாக அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் தனது மகன் அர்னவ்விஜய் நடிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து சினிமா உலகிற்கு வரும் அருண் விஜய்யின் மகனையும் திரையுலகம் வாழ்த்தி வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

ஓப்பன் நாமினேஷன்: ரியோவை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடக்கும் நிலையில் இதுவரை கன்பெக்சன் அறையில் நாமினேஷன் நடந்த நிலையில் இன்று முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது

நிஷா வெளியேறியபோது ரம்யாவும் பாலாவும் செய்த வேலையை பாருங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று நிஷா வெளியேற்றப்பட்ட போது அனைவரும் கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைத்தனர். குறிப்பாக அர்ச்சனா மற்றும் ரியோ தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு

வீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் எடுத்த ஆரத்தி: வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று நிஷா வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. எதிர்பார்த்தது போலவே நிஷாவின் வெளியேற்றத்தின் போது அர்ச்சனா உடைந்து அழுதார் என்பதும் குறிப்பிடத்தக்கது

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சதீஷ்! இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சதீஷ்க்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர்கள் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்

சந்தானம் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ஃபர்ஸ்ட் சிங்கில் விரைவில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் சந்தானம் கடந்த 5 ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு' 'சக்க போடு போடு ராஜா' '