close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் அருண்ராஜா காமராஜ்.. மாயாவின் குரூப்பிஸத்தை மறைமுகமாக குத்தி காட்டினாரா?

Saturday, January 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் நேற்று சிறப்பு விருந்தினராக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார். தன்னுடைய இயக்கத்தில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ’லேபிள்’ என்ற தொடரை புரமோஷன் செய்வதற்காக சென்ற அவர் ’லேபிள்’ வெப் தொடரின் கதைச்சுருக்கத்தை போட்டியாளர்களுக்கு தெரிவித்தார். அதன் பிறகு லேபிள் டீசரையும் வெளியிட்டார். போட்டியாளர்கள் அனைவரும் ’லேபிள்’ டீசரை பார்த்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தன் மீது ஒரு ’லேபிள்’ வலுக்கட்டாயமாக குத்தப்படுவதை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உணர்ந்தீர்களா என்று கேட்க ஒவ்வொருவராக பதில் அளித்தனர். இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் ’நான் இந்த வீட்டிற்கு ஒரு விருந்தினராக வராமல் போட்டியாளராக வந்திருந்தால் இப்போது என்னை வரவேற்றது போல் வரவேற்று இருப்பீர்களா? என்று அருண்ராஜ் காமராஜ் கேட்க அதற்கு விசித்ரா, ‘உங்கள் கையில் ஒரு ஐந்தாறு படங்கள் இருந்தால் நிறைய பேர் உங்களை இதேபோல் வரவேற்று இருப்பார்கள் என்றார்.

உடனே ’நாங்க அப்படி இல்லை என்று மாயா கூறினார். அதற்கு அருண்ராஜ் காமராஜ் ’நாங்கள் இல்லை என்று நீங்கள் ஏன் எல்லோரையும் சேர்த்து சொல்கிறீர்கள்’ என்று கூற அதன் பின் மாயா’நான் இல்லை’ என்று கூறினார். அப்போது அருண்ராஜா காமராஜ் ’நாங்க இல்லை என்பது நீங்கள் உங்களை பெரிதாக காண்பிக்கும், நான் இல்லை என்று சொல்வதில் ஒரு நேர்மை இருக்கும், நாங்க இல்லை என்று சொல்வதில் நேர்மையில்லை, அது எல்லோரையும் சேர்த்து நீங்கள் சொல்வதாக தெரிகிறது’ என்று அவர் மறைமுகமாக மாயாவின் குரூப்பிஸத்தை சுட்டிக்காட்டினார்.

இதுதான் சான்ஸ் என்று உடனே தினேஷ், மணி, விஷ்ணு ஆகியோர் கைதட்ட தொடங்கிவிட்டனர். இந்த காட்சியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.