சசிகலா ஆதரவு அமைச்சருக்கு அரவிந்தசாமியின் பதிலடி

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற அசாதாரண சூழ்நிலை இருக்கும் நிலையில் எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்திக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம், நையாண்டியுடன் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து கூறியஅமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது சமூக வலைத்தளத்தில் "கடந்த 48 மணி நேரமாக, எம்.எல்.ஏக்களை கிண்டல் மற்றும் நையாண்டி செய்தும், தொலைபேசியில் அழைத்து துன்புறுத்துவதும் நியாயமானதா? எங்கள் சுதந்திரத்துக்கான உரிமை எங்களிடம் உள்ளது" என்று பதிவு செய்துள்ளார். இவர் சசிகலா ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் அரவிந்த்சாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, "இந்த மாதிரியான தருணங்களில் மக்கள் கண்டிப்பாக அவர்களது கருத்தை வெளிப்படுத்த வேண்டும். அதற்கேற்றார் போல் நீங்கள் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையில். அது எப்படியான கருத்தாக இருந்தாலும் சரி" என்று பதிலளித்துள்ளார்.

More News

சசிகலா மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் அவர்தான் முதல்வர். சு.சுவாமி

பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சற்றுமுன்னர் பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் சசிகலா முதல்வர் பதவியேற்பது குறித்து கூறும்போது, 'சசிகலா மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை...

நல்லது நடக்கும். தர்மம் நிச்சயம் வெல்லும். கவர்னரை சந்தித்த பின் ஓபிஎஸ் பேட்டி

தமிழக முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் சற்று முன்னர் தமிழக கவர்னரை சந்தித்துவிட்டு தனது இல்லத்தில் திரும்பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்...

மு.க.ஸ்டாலினைவிட அவரது மனைவி நல்லவர். சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி இன்று பிபிசி ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டி ஃபேஸ்புக் லைவ் மூலம் சற்று முன்னர் ஒளிபரப்பப்பட்டது...

டெல்லியில் மோடி-தம்பிதுரை சந்திப்பு. என்ன பேசினார்கள்?

தமிழக கவர்னரை இன்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ள நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார்....

ஆளுனர் மாளிகையில் ஓபிஎஸ். ராஜினாமா குறித்து விளக்கம் அளிப்பார் என தகவல்

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ் சற்று முன்னர் மும்பையில் இருந்து சென்னை வந்தடைந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு கவர்னரை சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டிருந்தது...