ரஜினி, கமல், விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு ஆதரவு? அரவிந்தசாமி

  • IndiaGlitz, [Saturday,January 11 2020]

ஒரு பெரிய நடிகர் புகழுடன் இருப்பதற்கும், அவர் நல்லாட்சி தருவார் என்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று நடிகர் அரவிந்த்சாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பெரிய நடிகர் என்ற புகழை மட்டும் வைத்து அரசியலிலும் அவர் நல்ல ஆட்சியை கொடுத்துவிட முடியாது என்று கூற முடியாது. அவருக்கு நல்ல ஆட்சியை கொடுக்கும் அளவுக்கு நல்ல மனது மட்டும் இருந்தால் போதாது. அவர் நல்ல விஷயங்களை கற்று அறிந்திருக்க வேண்டும். ஒரு அரசை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து படித்திருக்க வேண்டும். ஒருபுதிய திட்டத்தை ஏற்படுத்தி அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற அறிவும் அனுபவமும் இருக்க வேண்டும் என்றும் அரவிந்த்சாமி கூறியுள்ளார்

மேலும் ரஜினி கமல் விஜய் ஆகிய மூவரில் மூவருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது என்றும் இவர்களில் யாருக்கு உங்கள் ஆதரவு என்ற கேள்விக்கு பதிலளித்த அரவிந்தசாமி ’நான் ரஜினிகாந்தின் ரசிகனாக இருப்பதாலோ அல்லது கமல் ரசிகனாக இருப்பதாலோ அல்லது விஜய்யை எனக்கு பிடிக்கும் என்பதாலோ நான் ஓட்டு போட மாட்டேன். என்னை பொருத்தவரை அவர்கள் அரசியலுக்கு வந்தவுடன் அவர்கள் சொல்லும் விஷயங்கள், அவர்களுடன் இருக்கும் நபர்கள், அவர்கள் சொல்லும் விஷயங்களை அவர்களால் இந்த செயலை செய்ய முடியுமா என்பதை ஆராய்ந்து தான் நான் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பதை முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார்

நடிகர் அரவிந்தசாமியின் இந்த கருத்து இனி அரசியலுக்கு வர இருக்கும் நடிகர்களுக்கு ஒரு நல்ல அறிவுரையாக இருக்கும் என்று கருதப்படுகிறது
 

More News

முடிவுக்கு வந்தது நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'தர்பார்' திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கர்ப்பமா இருக்கீங்க போல.. கேள்வி கேட்ட பத்திரிக்கையாளருக்கு அதிரடியாக பதிலளித்த தீபிகா படுகோனே..!

கர்ப்பம் தொடர்பாகக் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு அதிரடியாகப் பதிலளித்துள்ளார் தீபிகா படுகோன்.

நெல்லை கண்ணன் ரிலீஸ்.. அப்போ ஆபரேஷன் ஃபெயிலியர்..! H.ராஜாவை சீண்டிய சீமான்.

அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை என்றும் பாஜகவின் எச்.ராஜா கூறிய ஆப்ரேஷன் சக்ஸஸ் என கூறிய பதிவிற்கு ஆப்ரேஷன் பெயிலியர் என்றும் கூறியுள்ளார். 

பாவம் மக்கள், மத்திய அரசு என்ன சொன்னாலும் நம்பிவிடுகிறார்கள்...! ப.சிதம்பரம்.

இந்தியர்களைப் போல பாவப்பட்ட மக்களை எங்கேயும் பார்த்ததில்லை என்றும், மத்திய அரசு அதன் திட்டங்கள் பற்றி என்ன சொன்னாலும் அதை நாட்டின் குடிமக்கள் நம்பிவிடுகிறார்கள் என்று கிண்டல் தொனியில் கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

போராட்டங்களுக்கு மத்தியில் நடுஇரவில் அமலுக்கு வந்த #CAA..!

குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான விதிமுறைகள் வகுக்கும் முன்பாகவே அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.