பா.ரஞ்சித்-ஆர்யா படத்தின் முக்கிய அப்டேட்!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் ’சல்பேட்டா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருவதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

வடசென்னை பகுதியில் உள்ள குத்துச்சண்டை வீரரின் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார் என்பதும் குத்துச்சண்டை கேரக்டருக்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்து உண்மையான குத்துச்சண்டை வீரர் போல் தனது உடலை மாற்றி உள்ளார் என்பதும் தெரிந்ததே. ஆர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தின் நாயகியாக துஷாரா என்ற நடிகை நடித்து வருகிறார் என்பதும், இவர் கடந்த ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

ஆர்யாவின் 30வது படமான இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் கலையரசன் நடித்து வருகின்றனர் என்பதும் முரளி ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒரு யானையின் 35 ஆண்டுகால சிறை வாழ்க்கை… பல அமைப்புகளின் கடின முயற்சியால் நடந்த மாற்றம்??

தென் ஆப்பிரிக்காவை தவிர சில தெற்காசிய நாடுகளில் மட்டுமே யானைகள் வாழுகின்றன.

பாலாஜி சொன்னது பலித்தது: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா என்ட்ரி ஆகும் வரை குரூப் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த போட்டியாளர்கள் அர்ச்சனாவின் வரவிற்குப் பின்னர் அவரது அன்புக்கு கட்டுப்பட்டு குரூப்

விஜய் சேதுபதியை பார்க்க ரிஸ்க் எடுத்த கிராம மக்கள்: படக்குழுவினர் அதிர்ச்சி

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஜனநாதன் இயக்கி வரும் 'லாபம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடைபெற்று வருகிறது

ரஜினியை அடுத்து கமல் எடுத்த அதிரடி நடவடிக்கை: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அரசியல் கட்சி குறித்த தெளிவான ஒரு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய

நயன்தாராவின் அடுத்த பட படப்பிடிப்பு எப்போது?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் அவர் தற்போது 'நிழல்' என்ற மலையாளத் திரைப்படத்தில்