close
Choose your channels

ஆர்யா - கெளதம் கார்த்திக் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. மாஸ் டைட்டில் இதுதான்..!

Monday, May 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர்கள் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த படம் குறித்து வெளியான வீடியோவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு 'Mr.X’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திபு நிணன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் தன்வீர் மிர் என்றும், படத்தொகுப்பாளர் பிரசன்னா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்த டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்து தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment