ஆர்யா-சாயிஷா மகளின் க்யூட் வீடியோ.. இணையத்தில் வைரல்

  • IndiaGlitz, [Saturday,December 03 2022]

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான ஆர்யா - சாயிஷா தம்பதிகளின் மகள் இருக்கும் க்யூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா, கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைக்கு ஆரியானா என்ற பெயர் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவருமே சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்தாலும் தங்களது மகளின் புகைப்படமோ வீடியோவோ அதிகமாக பதிவு செய்வதில்லை.

இந்த நிலையில் சற்று முன்னர் சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது தாயார் மற்றும் மகளுடன் பண்ணை வீட்டில் இருக்கும் காட்சிகளை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சாயிஷாவின் மகள் இருக்கும் க்யூட் காட்சிகளும் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

நாளை வெளியாகும் பாடலில் ஒரு சூப்பர் ஸ்பெஷல்: 'வாரிசு' படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் விபத்து.. பரிதாபமாக பலியான பிரபலம்!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பிரபலம் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'தளபதி 67' படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளமே வாங்காத விஜய்? ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு

காதலில் விழுந்த தெருக்குரல் அறிவு.. வைரலாகும் புகைப்படம்!

பிரபல பாடகர் தெருக்குரல் அறிவு தனது காதலி குறித்த தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விஷாலின் 'லத்தி' படத்தின் சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் குஷி!

விஷால் நடித்த 'லத்தி' என்ற படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.