மொட்டை தலையுடன் ஆர்யா நடிக்கும் படம்

  • IndiaGlitz, [Monday,December 26 2016]

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் ஆர்யாவுக்கு சுமாரான வெற்றி படங்களே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆர்யா தற்போது 'கடம்பன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக உடல் எடையை ஏற்றி ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் 'பருத்திவீரன்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய அமீர் இயக்கத்தில் ஆர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா, மொட்டை தலையுடன் நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் ஆர்யாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆர்யா, அமீர் இருவருக்குமே திருப்புமுனையை ஏற்படுத்த காத்திருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சமந்தாவின் திருமண நிச்சயதார்த்த தேதி அறிவிப்பு

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் விரைவில் இவர்களது திருமண நிச்சயதார்த்த தேதி மற்றும் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இளையதளபதி விஜய் தாயாருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று 'சென்னையில் திருவையாறு'.

இளையதிலகம் பிரபுவுக்கு கமல்-ரஜினியின் வாழ்த்துக்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும், இளையதிலகம் என்று அழைக்கப்படுபவருமான பிரபு தனது 60வது பிறந்த நாளை நேற்று சிறப்பாக கொண்டாடினார்

இந்த வார சென்னை பாக்ஸ் ஆபீஸ் விபரங்கள்

கடந்த வெள்ளியன்று வெளியான அமீர்கானின் 'டங்கல்', விஷாலின் 'கத்திச்சண்டை', சசிகுமாரின் 'பலே வெள்ளையத்தேவா', ஆகிய படங்களின் சென்னை வசூல் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்