close
Choose your channels

அடுத்த படத்தின் முக்கிய அப்டேட்டை கொடுத்த ஆர்யா.. செம மாஸ் ஸ்டில் ரிலீஸ்..!

Wednesday, March 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஆர்யா தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ’காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் மார்ச் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தனது சமூக வலைதள பக்கத்தில் ஆர்யா அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்திற்கு பின் ஆர்யாவின் திரையுலக வாழ்வில் இந்த படம் மீண்டும் ஒரு திருப்புமுனை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்யா ஜோடியாக சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நாயகியாக நடித்த சித்தி இதானி இந்த படத்தில் நடித்து வருகிறார். அனல் அரசு ஸ்டண்ட் இயக்கத்தில் சாண்டி மாஸ்டர், சோபி மாஸ்டர், ஜானி மாஸ்டர், சதிஷ் கிருஷ்ணன் ஆகியோர் இந்த படத்தின் நடன இயக்குனர்களாக பணிபுரிந்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் செம மாஸ் ஸ்டில்லை ஆர்யா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த ஸ்டில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment