கஞ்சா கிடைக்காததால் கோபத்தில் கத்தியை விழுங்கிய ஆசாமி!!! அதிர்ச்சித் தகவல்!!!

  • IndiaGlitz, [Tuesday,July 28 2020]

ஹரியாணா மாநிலத்தில் 28 வயது இளைஞர் ஒருவர் கஞ்சா கிடைக்காமல் விரக்தியில் சமையலறை கத்தியை விழுங்கிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கத்தியை விழுங்கியதாகவும் கூறப்படுகிறது. கஞ்சா கிடைக்காத விரக்தியில் 20 செ.மீட்டருள்ள கத்தியை அப்படியே முழுமையாக விழுங்கியிருக்கிறார். இந்த விஷயம் வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது. திடீரென்று அதிகப் பசி மற்றும் வயிற்று வலி ஏற்படுவதாக கூறியிருக்கிறார். உடனே அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அங்கு ஸ்கேன் செய்துபார்த்த போது வயிற்றில் கத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதுவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பித்தப்பைக்கு அருகிலேயே இருந்திருக்கிறது. உடனே அறுவை சிகிச்சை செய்து எய்ம்ஸ் மருத்துவர்கள் பத்திரமாக கத்தியை அகற்றியுள்ளனர். இந்த அறுவைச் சிகிச்சைக்கு 3 மணி நேரம் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு முளு நீளக் கத்தியை ஒரு மாதத்திற்கு முன்பு விழுங்கி அந்த ஆபத்தில் இருந்து உயிர் பிழைத்தும் இருக்கிறார். இதுகுறித்து மருத்துவர்களே வியப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது: கர்ணன் பர்ஸ்ட்லுக் குறித்து மாரிசெல்வராஜ்   

நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அதிகாலையில் இருந்தே சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் ஒப்பந்தம் குறித்து ஓவியாவின் பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் மூலம் உலக தமிழர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஓவியா திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தலைமறைவான சூர்யாதேவி மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கடந்த சில வாரங்களாக கொரோனா பரபரப்பையும் மீறி வனிதா விஜயகுமார்-பீட்டர் பால் திருமணம் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியானது என்பதும்

சென்னைக்கு ரூ.18 கோடி, திருத்தணிக்கு ரூ.109 கோடி: அடுக்கடுக்காக திட்டங்களைச் செயல்படுத்தும் தமிழக முதல்வர்!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரூ.18.24 மதிப்பிலான சுகாதார மையக் கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்திருக்கிறார்.

பாலிவுட் குறித்த ஏ.ஆர்.ரஹ்மானின் குற்றச்சாட்டு: ஆதரவு அளித்த தமிழக அமைச்சர்!

பாலிவுட் திரையுலகில் வாரிசுதாரர்களின் ஆதிக்கம் அதிகம் என்றும், புதியவர்கள் பாலிவுட்டில் நுழைந்தால் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புவதாகவும்