close
Choose your channels

பாலிவுட் குறித்த ஏ.ஆர்.ரஹ்மானின் குற்றச்சாட்டு: ஆதரவு அளித்த தமிழக அமைச்சர்!

Tuesday, July 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் திரையுலகில் வாரிசுதாரர்களின் ஆதிக்கம் அதிகம் என்றும், புதியவர்கள் பாலிவுட்டில் நுழைந்தால் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புவதாகவும், இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகத்தான் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘பாலிவுட்டில் தனக்கான வாய்ப்பை ஒரு கும்பல் தடுத்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார். ஆஸ்கார் விருது பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கே இந்த நிலையா? என பல திரையுலகினர் ரஹ்மானுக்கு ஆதரவாகவும், வாரிசு கும்பலுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்துக்கு ஆதரவு அளித்த தமிழக அமைச்சர் எஸ்பி வேலுமணி, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள் என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் திரு. ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். அவருக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவை பதிவு செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.