close
Choose your channels

மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த 'தெகிடி' பட நடிகர்.. போலீசார் தீவிர விசாரணை..!

Thursday, June 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அசோக் செல்வன் நடித்த ’தெகிடி’ திரைப்படத்தில் நடித்த குணச்சித்திர நடிகர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து அவரது மரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெகிடி’, ‘வட்டம்’, ‘டெடி’,‘லிஃப்ட்’, ‘இரும்புத் திரை’ உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கேரக்டரை நடித்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

அவரது நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொண்ட போதும் எந்தவிதமான பதிலும் இல்லை என்பதை அடுத்து காவல்துறை உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது மரணம் எதனால் நிகழ்ந்தது என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு விசாரணை செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குணச்சித்திர நடிகர் பிரதீப் கே விஜயன் மர்ம மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment