close
Choose your channels

மணமகளுடன் செம்ம ஆட்டம்.. ஆஷிஷ் வித்யார்த்தியின் திருமண புகைப்படங்கள்..!

Friday, May 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நேற்று திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் திருமணத்திற்கு பின் மணமகளுடன் அவர் நடனம் ஆடியது உள்பட ஒரு சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ தளபதி விஜய் நடித்த’ கில்லி’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்தவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 11 மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, ராஜோஷி பருவா என்பவரை திருமணம் செய்த நிலையில் நேற்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் அவரது குடும்பத்தில் உள்ள நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் இணையதளங்களில் ஆஷிஷ் - ரூபாலி திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் ஆஷிஷ், மணமகளுடன் சேர்ந்து நடனம் ஆடுவது உட்பட பல புகைப்படங்கள் உள்ளன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment