உலகின் 10 பணக்காரர் பட்டியலில் இணைந்த இந்தியர்: குவியும் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Monday,June 22 2020]

உலக பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி முதல் பத்து இடங்களுக்குள் இணைந்துள்ளது இந்தியாவிற்கே பெருமை தரக்கூடியதாக கருதப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி ஆசியா பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் சரிவை சந்தித்தார். இதனால் அவர் சமீபத்தில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதுமட்டுமின்றி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் முகேஷ் அம்பானியின் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இறங்கியதால் பெரும் சரிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் முகேஷ் அம்பானி தனது டிஜிட்டல் நிறுவனமான ஜியோவின் 24.17% பங்குகளை ஃபேஸ்புக் உள்பட ஒருசில நிறுவனங்களுக்கு விற்றார். இதன் மூலம் அவருக்கு ரூ.1,15,693.95 கோடிகள் கிடைத்தன. இதனால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. அதேநேரத்தில் பங்கு சந்தைகயும் மீண்டெழுந்து அவரது நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் உயர்ந்தன.. இதன் காரணமாக தற்போது முகேஷ் அம்பானி சொத்த மதிப்பு ரூ.4.9 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதனையடுத்து முகேஷ் அம்பானி தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனையடுத்து முகேஷ் அம்பானிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

ரெஸ்ட்லிங் ஹீரோ அண்டர்டேக்கர் அதிரடி முடிவு: ரசிகர்கள் அதிர்ச்சி

WWE எனப்படும் ரெஸ்ட்லிங் போட்டிகளில் ஹீரோவாக திகழ்ந்த அண்டர்டேக்கர் எடுத்துள்ள அதிரடி முடிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரையிலும் முழு ஊரடங்கு: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. தினந்தோறும் தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும்

நான் சினிமாவுக்கு வர விஜய் தான் காரணம்: நடிகர்-அரசியல்வாதி டுவீட்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22 என்றாலே விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதியில் அதிகாலை 12 மணிமுதல் வெகு சிறப்பாக ரசிகர்கள் கொண்டாடி வருவது வருவார்கள் என்பது தெரிந்ததே 

விஜய்யை வைத்து படம் எப்போது? இயக்குனரை கலாய்த்த நபர்

தளபதி விஜய்யின் பிறந்தநாள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பல பிரமுகர்களும்

விஜய் பிறந்த நாளில் அஜித்தை டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்

தளபதி விஜய்யின் பிறந்தநாளை இன்று அவருடைய ரசிகர்கள் மிகச்சிறப்பாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. மேலும் விஜய்யின் பிறந்த நாள் குறித்த