தனுஷின் 'அசுரன்' படத்தின் சென்சார் தகவல்

  • IndiaGlitz, [Monday,September 30 2019]

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது

'அசுரன்' படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்ததை அடுத்து இந்த படம் வரும் 4ஆம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

இந்த ஜென்மத்தில் நீ அனாதை கிடையாது: ரேஷ்மா

பிக்பாஸ் இல்லத்தில் இன்று ரேஷ்மா உள்பட நான்கு பேர் சிறப்பு விருந்தினர்களாக உள்ளே வந்துள்ள நிலையில் ரேஷ்மா அனைவர் மத்தியிலும் அன்பு குறித்து உருக்கமாக பேசுகிறார்.

சென்னை திரும்பினார் விஜய்! 'தளபதி 64' படப்பிடிப்பு எப்போது?

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய், அதன்பின் வெளிநாட்டுக்கு ஓய்வு எடுக்க சென்றார்.

நடிகர் சங்கத்தலைவர் நாசர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

நடிகர் சங்க தலைவர் நாசர் சற்றுமுன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்‌ கலைஞர்கள்‌

'பிகில்' டீசர் இணையத்தில் லீக் ஆகிவிட்டதா? பெரும் பரபரப்பு

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

தர்ஷனை நெகிழ வைத்த ஆடியன்ஸ்: பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தர்ஷன் வெளியேற்றப்படுகிறார் என்ற அறிவிப்பை கமல் அறிவித்தவுடன் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ஆடியன்ஸ்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்