'குக் வித் கோமாளி' அஸ்வின் படத்தின் இரண்டு ஹீரோயின்கள் யார் யார்?

  • IndiaGlitz, [Friday,July 09 2021]

’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் வேற லெவலில் பிரபலமான அஸ்வின். என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்றும் இந்த படத்தை டிரைடண்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்து உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் ஹரிஹரன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர்கள் அவந்திகா மற்றும் தேஜூ அஸ்வினி என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து இயக்குனர் ஹரிஹரன் கூறியபோது ’இந்த படத்திற்காக இரண்டு புதுமுகங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்தோம் என்றும் அவந்திகா பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் அவர் பல மியூசிக் வீடியோக்களில் நடித்துள்ளார் என்றும் கூறினார். அதேபோல் தேஜூ அஸ்வினி சென்னையை சேர்ந்தவர் என்றும் ’அஸ்கு மாரோ’ என்ற வீடியோ பாடலில் கவினுடன் இணைந்து அவர் நடனம் ஆடி உள்ளார் என்றும் கூறியுள்ளார். இருவருமே தங்களது கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார்கள் என்றும் ஆடிஷனில் அவர்களது நடிப்பு திருப்தி அளித்ததால் அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இருவருமே நவநாகரீக நகரத்து பெண்கள் கேரக்டரில் நடிக்க உள்ளார்கள் என்றும் கூறினார்.

மேலும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறிய ஹரிஹரன், இது ஒரு முக்கோண காதல் கதை என்றும் முழுக்கமுழுக்க ரொமான்ஸ் கதையம்சம் கொண்டது என்றும் அவர் தெரிவித்தார். 

அஸ்வின், தேஜூ அஸ்வினி, அவந்திகா ஆகியோர்களை அடுத்து  இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'வலிமை' படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் 'பீஸ்ட்' படப்பிடிப்பு?

அஜித்தின் 'வலிமை' படப்பிடிப்பு நடைபெற்ற அதே இடத்தில் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக அமெரிக்கா சென்று இருந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சென்னை திரும்பியுள்ளார். 

ஜீவஜோதியின் வாழ்க்கை படமாகிறது...! அதுவும் பல மொழிகளில்....

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில், ஜீவஜோதியின் வாழ்க்கை படமாக உள்ளது. இந்த திரைப்படத்தை ஜங்க்லீ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

விண்ணை தாண்டியும் வரவேணாம், வீட்டை தாண்டியும் வரவேணாம்: சிம்புவின் 'தப்பு பண்ணிட்டேன்' பாடல்!

சிம்பு பாடிய 'தப்பு பண்ணிட்டேன்' என்ற பாடலின் டீசர் நேற்று வெளியான நிலையில் இன்று அந்த பாடல் வெளியாகும் என இந்த பாடலின் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா ஏற்கனவே அறிவித்திருந்தார்

டாக்டர் மகேந்திரனை அடுத்து திமுகவை இணைகிறாரா பத்மப்ரியா?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார் என்பதும் அந்த கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒரு சட்டசபை தேர்தலை சந்தித்து விட்டது என்பதும்