50 ஆண்டுகள் பிரச்சனைக்கு தீர்வு காணும் அதர்வா

  • IndiaGlitz, [Thursday,July 02 2015]

எஸ்.பி.பி. சரண் தயாரிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும்' படத்தை இயக்கிய ராஜ்மோகன், ஆறு வருடங்கள் கழித்து தற்போது தனது இரண்டாவது படத்தை இயக்கவுள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் நாயகனாக நடிக்க அதர்வா சமீபத்தில் ஒப்பந்தம் செய்யபப்ட்டுள்ளார்.

ஏற்கனவே அதர்வா 'சண்டிவீரன்' என்ற கிராமத்து பின்னணி படம் ஒன்றில் நடித்து கொண்டிருக்கும் அதர்வா, தற்போது மற்றொரு கிராமத்து படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதை 1957ஆம் ஆண்டு நடக்கவுள்ளதாக இருக்கும் என்றும், தேனி, கொடைக்கானல் மற்றும் மறையூர் ஆகிய பகுதிகளில் வரும் 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக இயக்குனர் ராஜ்மோகன் கூறியுள்ளார். மேலும் கடந்த 1957ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை ஒரு கிராமத்தில் தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்றுக்கு அதர்வா வித்தியாசமான முறையில் தீர்வு காண்பதுதான் படத்தின் முக்கிய அம்சம் என்றும் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

உண்மைச்சம்பவங்கள் மற்றும் தன்னுடைய கற்பனைக்காட்சிகள் ஆகிய இரண்டும் கலந்து உருவாகும் இந்த படத்தில் அதர்வா கிராமத்தில் வாழும் அன்பு, பாசம், காதல் கொண்ட உள்ள ஒரு இளைஞராக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, எஸ்.பி.பி சரண் ஆகியோர்களும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

More News

சிபிஐ கேரக்டரில் தேசிய விருது பெற்ற நடிகை

கார்த்தி அறிமுகமாகிய 'பருத்தி வீரன்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி, அதன்பின்னர் நடித்த பெரும்பாலானபடங்கள் கவர்ச்சியான...

ஹாலிவுட்டில் அஜீத்? ஷாலினியின் கவலை

அஜீத் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'தல 56' படத்திற்காக ஹாலிவுட் ஸ்டைலில் வித்தியாசமான தோற்றத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றாராம்........

விஜய்யிடம் பாராட்டு பெற்ற எதிர்நீச்சல் நடிகை

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் செப்.17ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.......

சிம்புவின் இது நம்ம ஆளு' ரிலீஸ் தேதி?

சுமார் மூன்று வருட காலம் சிம்பு நடித்த திரைப்படம் எதுவும் ரிலீஸாக நிலையில், சிம்பு, ஹன்சிகா நடித்த 'வாலு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக...

'வேலையில்லா பட்டதாரி'களுக்கு சமந்தா கொடுத்த ரூ.5000/-

ஒரு படம் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி முடித்த பின்னர் கடைசி நாள் படப்பிடிப்பில் ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு விதத்தில் அந்த படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்கள் உள்பட அனைவருக்கும் ஏதாவது பரிசுப்பொருட்களை கொடுப்பது வழக்கம்....