close
Choose your channels

சிம்புவின் "இது நம்ம ஆளு' ரிலீஸ் தேதி?

Wednesday, July 1, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுமார் மூன்று வருட காலம் சிம்பு நடித்த திரைப்படம் எதுவும் ரிலீஸாக நிலையில், சிம்பு, ஹன்சிகா நடித்த 'வாலு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நடித்துள்ள இன்னொரு படமான 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பசங்க' புகழ் பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ளதால், இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்புவுடன் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா, சந்தானம், சூரி, அர்ஜூனன், ஜெயப்பிரகாஷ், மற்றும் பலர் நடித்துள்ளனர். சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த திரைப்படத்தை பாண்டியராஜ் இயக்கி வருகிறார்.

மூன்று ஆண்டுகள் இடைவெளி ஆனாலும் சிம்புவின் ரசிகர்கள் இன்னும் அதே உற்சாகத்தோடு இருக்கின்றனர் என்பது சமீபத்தில் வெளியான 'வாலு' டிரைலரில் இருந்தே உறுதியானது. எனவே ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்த அடுத்தடுத்து தனது படங்களை ரிலீஸ் செய்ய சிம்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்திலும், செல்வராகவனின் இயக்கத்தில் 'கான்' என்ற படத்திலும் நடித்து வருகின்றார். இந்த படங்களும் இவ்வருட இறுதியில் அல்லது 2016 ஆரம்பித்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.