காதலர் தினத்தில் ஒரு அழுத்தமான அன்பு முத்தம்.. அட்லி-ப்ரியாவின் வீடியோ..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
ஒவ்வொரு காதலர் தினத்திலும் திரை உலக பிரபலங்கள் அந்த தினத்தை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அதேபோல் இந்த ஆண்டு காதலர் தினத்திலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்பட பல திரையுலக பிரபலங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகின.
அந்த வகையில் இயக்குனர் அட்லி மற்றும் அவருடைய மனைவி ப்ரியா அட்லி, காதலர் தினத்தை கொண்டாடிய வீடியோ அவர்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையுடன் காதலர் தினத்தை கொண்டாடிய அட்லி, ப்ரியா அட்லியின் இந்த வீடியோவின் இறுதியில் பிரியா அட்லி, அட்லிக்கு ஒரு அழுத்தமான அன்பு முத்தம் கொடுத்த காட்சியும் உள்ளன.
இந்த வீடியோவை அடுத்து அட்லி, ப்ரியா அட்லிக்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கி அதனை மாபெரும் வெற்றிப் படமாக்கிய அட்லி, அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)