அட்லியின் அடுத்த பட ஹீரோ இவரா? இன்னொரு மாஸ் படம் காத்திருக்கு..?

  • IndiaGlitz, [Monday,September 11 2023]

அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில், உருவான ’ஜவான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் ஹீரோ குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

‘ராஜா ராணி’ ’தெறி’ ’மெர்சல்’ ’பிகில்’ மற்றும் ’ஜவான்’ என ஐந்து வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. இதுவரை தோல்வியே காணாத அவர் கமர்சியலாக வெற்றி பெற்றுள்ளார் என்பதும் இதனால் அவருக்கு திரையுலகில் எப்போதும் டிமாண்ட் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஜவான்’ திரைப்படத்தை முடித்துவிட்டு மனைவி மற்றும் குழந்தையுடன் மூன்று மாதம் முழுமையாக ஓய்வு எடுக்கப் போவதாக கூறியுள்ள அட்லி இயக்கும் அடுத்த படம் எதுவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அட்லி அடுத்ததாக அல்லு அர்ஜுன் திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், அட்லி ஓய்வுக்கு பின் சென்னை திரும்பியவுடன் இந்த படத்தின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

More News

'இவரை பாராட்டினால் லோகேஷ் என்னை திட்டுவார்.. 'லியோ' டெக்னீஷியன் குறித்து லலித்..! 

விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' என்ற திரைப்படத்தின்  பர்ஸ்ட் லுக் ரிலீஸ் விழாவில் கலந்து கொண்ட 'லியோ' தயாரிப்பாளர் லலித், இந்த படத்தை  முதல் பாதி பார்த்து விட்டதாகவும், படம் சிறப்பாக வந்திருப்பதாகவும்

'தளபதி 68' படத்தில் இந்த நடிகை நடிப்பது உறுதியா? வெங்கட்பிரபு வெளியிட்ட வீடியோ..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' படத்தை இயக்கவிருக்கும் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் சினேகா இருப்பதை அடுத்து இந்த படத்தில் சினேகா நடிக்க அதிக வாய்ப்பு

'கேப்டன் மில்லர்' படத்தின் முக்கிய பணிகள் தொடக்கம்.. ரிலீஸ் எப்போது?

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தனுஷ் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இருப்பினும் மற்ற காட்சிகளின்

இவருக்கு வயது 36 ஆ? இல்லை 16ஆ? தனுஷ் நாயகியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

தனுஷ் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் 'இவருக்கு வயது 36ஆ அல்லது 16ஆ

மூன்றே நாளில் இத்தனை கோடியா? 'ஜவான்' வசூலின் அதிகாரபூர்வமான தகவல்..!

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில், அனிருத் இசையில், உருவான 'ஜவான்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான நிலையில் மூன்றே நாட்களில் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்