சொன்ன வார்த்தையை காப்பாற்றுங்கள்: ரஜினியிடம் அய்யாக்கண்ணு கோரிக்கை

  • IndiaGlitz, [Sunday,June 18 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த சில மாதங்களாக அவரை பிரபல அரசியல்வாதிகளும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரையுலக பிரமுகர்களும் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு அவர்கள் ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது ஏற்கனவே வாக்குறுதி கொடுத்தபடி தேசிய நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரஜினி ரூ.1 கோடி தருவதாக கூறியது குறித்து அவரிடம் அய்யாக்கண்ணு மனு அளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரஜினியின் சகோதரர் 'ரஜினி ஏற்கனவே நதிநீர் இணைப்புக்கு அறிவித்தபடி ரூ.1 கோடியை வங்கியில் ஏற்கனவே, 'டிபாசிட்' செய்து விட்டதாகவும், நதிநீர் இணைப்பு பணிகள் துவங்கும்போது, சம்பந்தப்பட்டோரிடம் அந்த பணத்தை தருவார் என்றும், சொன்னால் சொன்னபடி செய்வார்; அது தான் ரஜினிகாந்த் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல் 10, சிவாஜி 9, விஜய்சேதுபதி 8: இது என்ன கணக்கு தெரியுமா?

கோலிவுட் திரையுலகில் 'தசாவதாரம்' என்ற படத்தின் மூலம் 10 கேரக்டர்களில் நடித்த ஒரே நடிகர் என்ற புகழ் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இன்னும் உள்ளது. அதேபோல் 'நவராத்திரி' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 9 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருந்தார்...

அரவிந்தசாமியின் 'நரகாசுரன்' படத்தில் ரஜினி-தனுஷ் பட நாயகி

'துருவங்கள் 16' என்ற வெற்றி படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் இரண்டாவது படமான 'நரகாசுரன்' படத்தில் அரவிந்தசாமி நடிக்கவுள்ளார் என்பதையும், இந்த படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த பட்டியலுடன் கூடிய போஸ்டர் இன்று அரவிந்தசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்பதையும் நேற்று பார்த்தோம்...

தமிழ் சினிமாவின் 'அழகன்' அரவிந்தசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகைகளில் எத்தனையோ பேர் அழகிகளாக இருந்தாலும் தமிழ் சினிமாவை பொருத்தவரையும் அழகு, ஸ்மார்ட், ஸ்டைல் உள்ள நடிகர்களில் மிகச்சிலரில் ஒருவர் அரவிந்தசாமி என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட ஒரு உண்மை...

64வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது பெற்ற நட்சத்திரங்கள். முழு விபரம்

தேசிய விருதை அடுத்து திரை நட்சத்திரங்கள் பெரிதும் மதிக்கும் ஒரு விருது என்றால் அது பிலிம்பேர் விருதுதான்...

நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை: நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் வழக்கு, முறைப்படி இன்று நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.