'அய்யப்பனும் கோஷியும்' பட இயக்குனருக்கு ஏற்பட்ட திடீர் பிரச்சனை

கொரோனா வைரஸ் லாக்டவுன் அறிவிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும்’. சுமார் 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரூபாய் 60 கோடிக்கு மேல் வசூல் செய்து மலையாள திரையுலகை ஆச்சரியப்பட வைத்தது.

இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதில் பிரித்திவிராஜ் மற்றும் பிஜூ மேனன் நடித்த கேரக்டர்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அய்யப்பனும் கோஷியும்’ பட இயக்குனர் சச்சிதானந்தன் என்பவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டுள்ளதால் அவரது மூளைக்கு செல்லும் ரத்தம் தடை ஏற்பட்டு உள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சச்சிதானந்தம் அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதால் மலையாள திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷூக்கு இருந்த பிரச்சனை சுஷாந்த் சிங்கிற்கு இருந்ததா? பிரபல எழுத்தாளர் அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரை உலகையே குலுக்கியது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

உறவினரின் வளைகாப்புக்கு புதுவை சென்று வந்த சென்னை நபர் கொரோனாவுக்கு பலி!

புதுவையில் உள்ள உறவினர் வீட்டின் வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது 

லடாக் தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலி: 11 வீரர்கள் காயம் என தகவல்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு நடந்த தாக்குதல் ஒன்றில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தியையும் அதில் ஒருவர் இராணுவ அதிகாரி

லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்தவர்களில் ஒருவர் தமிழர்: அதிர்ச்சி தகவல்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு திடீரென சீன துருப்புகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு ராணுவ வீரர்களும் வீரமரணம்

லடாக்கில் சீன ராணுவம் திடீர் தாக்குதல்: 3 இந்திய ராணுவத்தினர் வீரமரணம்

கடந்த சில வாரங்களாகவே இந்திய-சீன எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு வருவதும், பதிலடியாக