இந்திய திரையுலகை அதிசயிக்க வைத்த 'பாகுபலி 2' வியாபாரம்

  • IndiaGlitz, [Monday,October 17 2016]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது தயாராகி வரும் 'பாகுபலி 2' படத்தின் வியாபாரம் இந்திய திரையுலகையே அதிசயிக்க வைத்துள்ளது.
இந்த படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமை மட்டுமே ரூ.51 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தொகை பாலிவுட் படங்கள் அல்லாத படங்களின் மிகப்பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகியவற்றின் அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் உரிமை ரூ.45 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. கிரேட் இண்டியா பிலிம்ஸ் நிறுவனம் இந்த மிகப்பெரிய டீலை முடித்துள்ளதாக தெரிய வருகிறது.
மேலும் நிஜாம் ஏரியாவின் தெலுங்கு உரிமை மட்டுமே ரூ.45கோடிக்கு விற்பனையாகியுள்ளது. மேலும் தமிழக, கேரள மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளின் வியாபாரம், வெளிநாட்டு உரிமைகளின் வியாபாரம் ஆகியவற்றின் தகவல்கள் மலைக்க வைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், ராணா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

More News

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்தின் டைட்டில்..

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் தீபாவளி தினத்தின் வெளிவர வாய்ப்பு உள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

கமல் ரசிகர்கள் மீது ஏன் புகார் கொடுக்கவில்லை?- சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்த படமான 'ரெமோ' மட்டும் வெற்றி பெறவில்லை, பிரபல தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் அவர் அளித்த பதில்களை பார்க்கும்போது அவர் வாழ்க்கையிலும் வெற்றி பெற்றுவிட்டார் என்றும் அவருடைய மெச்சூரிட்டியான பதில் அவருடைய மனித நேயத்தை வெளிக்காட்டும் வகையில் இருந்தது என்றும் நினைக்க தோன்றுகிறது.

ரெமோ, தேவி, றெக்க சென்னை வசூல் விபரங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ', பிரபுதேவா நடித்த 'தேவி மற்றும் விஜய்சேதுபதி நடித்த 'றெக்க' ஆகிய படங்கள் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில் இந்த படங்களின் கடந்த வார இறுதி சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

இளம் வெற்றி நாயகி கீர்த்திசுரேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சிவாஜி கணேசன் நடித்த 'கீழ்வானம் சிவக்கும்' ரஜினிகாந்த் நடித்த 'நெற்றிக்கண்' உள்பட பல படங்களில் நடித்த 80களின் நாயகி மேனகாவின் மகளும், பிரபல நடிகையுமான கீர்த்திசுரேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

தமிழக வசூலில் 'ரெமோ' செய்த சிறப்பான சாதனை

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நீண்ட விடுமுறை நாட்களில் வெளிவந்தது.