'பாகுபலி 2' வீடியோ லீக் விவகாரம். மேலும் 6 பேர் கைது.

  • IndiaGlitz, [Friday,November 25 2016]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் 'பாகுபலி 2' படத்தின் வீடியோ க்ளிப்பிங்கை வெளியிட்ட கிருஷ்ணா என்பவர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் கிருஷ்ணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது நண்பர் ஒருவருக்கு அந்த வீடியோவை ஃபார்வேர்ட் செய்ததாகவும், அவருடைய நண்பர் மேலும் ஐந்து பேர்களுக்கு வீடியோவை அனுப்பியதாகவும் தெரியவந்தது. இவர்கள் ஆறு பேர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
'பாகுபலி'யை கட்டப்பா கொலை செய்தது ஏன்? என்பது உள்பட இந்த படத்தின் அனைத்து காட்சிகளும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த வீடியோ லீக் ஆனது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது எடிட்டிங் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கைது செய்யப்பட்ட கிருஷ்ணாவின் லேப்டாப்பில் நாகார்ஜுனா, அனுஷ்கா நடித்து வரும் 'ஓம் நமோ வெங்கடேசாயா' என்ற தெலுங்கு படத்தின் வீடியோ க்ளிப்பிங்கும் இருந்ததாக கூறப்படுகிறது.

More News

தமிழில் அரைசதம். தெலுங்கில் ஆரம்பம். ரெமோவின் சாதனை

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் தமிழில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகியது. இந்த படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூலை அள்ளியது.

ரஜினி பிறந்த நாளில் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிடும் ஆப்பிள் பாக்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் ஏற்கனவே இரண்டு படங்கள் இயக்கி...

திருமண மொய் வாங்க ஸ்வைப் மிஷினுடன் அமர்ந்திருந்த மணமக்கள்

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற பிரதமரின் ஒரே ஒரு அறிவிப்பு நாட்டையே தலைகீழாக மாற்றிவிட்டது. இதுவரை ...

கவுதம் மேனன் - விக்ரம் படம் குறித்த புதிய தகவல்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தற்போது இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை அடுத்து விக்ரமுடன் இணையவுள்ளார்...

ரூபாய் நோட்டு விவகாரம் திட்டமிடப்பட்ட திருட்டு; சட்டபூர்வ கொள்ளை. மன்மோகன் சிங் பாய்ச்சல்

ஊழல் பணம், கருப்புப்பணம், கள்ள நோட்டுக்கள் ஆகியவற்றை ஒழிக்க மத்திய அரசு சமீபத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது...