பாட்ஷா 2 வதந்தி உண்மையாக வேண்டும் என ஆசை. சுரேஷ்கிருஷ்ணா

  • IndiaGlitz, [Wednesday,July 22 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான 'பாட்ஷா' படத்தின் இரண்டாவது பாகத்தில் அஜீத் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவே இயக்கவுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதுகுறித்து இன்று இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சமூகவலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.


'பாட்ஷா' படத்தின் இரண்டாவது பாகத்திற்கு நான் தயாராகி வருவதாகவும், அந்த படத்திற்காக நான் அஜீத்தை அணுகியதாகவும் வெளிவந்துள்ள செய்திகள் வெறும் வதந்திதான். ஆனால் இந்த வதந்தி உண்மையாக வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அந்த சந்தர்ப்பத்திற்காக நான் பெரும் மகிழ்ச்சி அடைவேன்' என்று கூறியுள்ளார்.

ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்ததால், பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்திலும் அஜீத் நடிக்க வேண்டும் என அஜீத் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் தனக்கு மகிழ்ச்சி என சுரேஷ்கிருஷ்ணாவும் தற்போது கூறியுள்ளதால் அஜீத்தின் சம்மதம் ஒன்று மட்டுமே தற்போது தேவைப்படுகிறது. அஜீத் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார் என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

More News

கருணைக்கொலை கதையில் நடிக்கும் தன்ஷிகா

பேராண்மை, மாஞ்சாவேலு, அரவான், ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகை தன்ஷிகா, பாலாவின் 'பரதேசி' படத்திற்கு பின்னர்...

வில்லனாக மாறிய கமல்ஹாசன் மச்சான்

உலக நாயகன் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பாபநாசம்' திரைப்படம், பாகுபலி' என்ற சுனாமியையும் தாண்டி நல்ல வசூலுடன்...

அமலாபால் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்?

'தலைவா' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை அமலாபால், அந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம்...

ஆறு வருடங்களுக்கு பின் மீண்டும் அபியுடன் இணையும் கணேஷ்?

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு பெரும்புகழ் தேடித்தந்த படங்களில்...

கவர்ச்சி நடிகையின் ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது 'விஜய் 59"...