'பேச்சிலர்' நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்.. மீண்டும் கிடைத்த மாஸ் வாய்ப்பு..!

  • IndiaGlitz, [Monday,October 09 2023]

ஜிவி பிரகாஷ் நடித்த ’பேச்சிலர்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை திவ்ய பாரதிக்கு மீண்டும் ஒரு மாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’பேச்சிலர்’ என்ற திரைப்படத்தில் திவ்யபாரதி நாயகியாக நடித்திருந்தார் என்பதும் சுப்புலட்சுமி என்ற அவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே

இந்த படத்தை அடுத்து தற்போது அவர் கதிர் ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷின் 25வது திரைப்படத்தில் திவ்யபாரதி ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்க உள்ளார். ’கிங்ஸ்டன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடித்த ’காதலிக்க யாரும் இல்லை’ என்ற படத்தை இயக்கியிருந்த நிலையில் இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

மிகப்பெரிய பட்ஜெட் உருவாகும் இந்த படத்தில் மீண்டும் ஜிவி பிரகாஷ் உடன் திவ்ய பாரதி நடிப்பதால் இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

'தலைவர் 170': முடிகிறது முதல்கட்ட படப்பிடிப்பு.. அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தொடங்கிய நிலையில் இன்றுடன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைவதாக தகவல் வெளியாகியுள்ளன.

மாமதுரை அன்னக்கொடி.. வா மதினி அண்ணன் ரெடி.. 'ஜிகர்தண்டா 2' பாடல் ரிலீஸ்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில். ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா முக்கிய கேரக்டரில் நடித்த   'ஜிகர்தண்டா 2' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின்

3 போட்டியாளர்களை குறிவைத்த மொத்த போட்டியாளர்கள்.. எலிமினேஷனில் இவர் உறுதியா?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அதில் இடம் பெற்றவர்களில் ஒருவர்

பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்.. அனன்யாவை அடுத்து திடீரென வெளியேறிய போட்டியாளர்..!

பிக் பாஸ் வீட்டில் நேற்று அனன்யா ராவ் எலிமினேஷன் செய்யப்பட்ட திடீரென இன்னொரு போட்டியாளர் வெளியேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீங்க கேப்டனாக இல்லை.. உங்ககிட்ட ஆளுமை இல்லை.. வச்சு செய்யும் விஷ்ணு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரே வாரத்தில் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.