'வாலு' தடை- சிம்புவுடன் பேசிய தனுஷ்

  • IndiaGlitz, [Tuesday,July 14 2015]

நடிகர் சிலம்பரசன் ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றமான செய்தி… அவர் நடித்த 'வாலு' படம் ஜூலை 17 அன்று வெளியாகத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். படம் வெளியிடப்படுவதை எதிர்த்து மேலும் ஆறு வழக்குகள் இருப்பதால், வாலு' மீண்டும் ஒரு முறை காலவரையின்றி தள்ளிப்போயிருக்கிறது.

மூன்றாண்டுகளாகத் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் ஜூலை 17 அன்று வெளியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த சிம்புவுக்கு இச்செய்தி நிச்சயம் வருத்தம் தந்திருக்கும். ஆனால அவர் இதனால் நம்பிக்கை இழந்திடவில்லை.

இதைச் சொல்வது திரைத் துறையில் அவரது போட்டியாளராகக் கருதப்படுபவரும் நிஜத்தில் அவரது நண்பருமான நடிகர் தனுஷ்,

'”சிம்புவிடம் தொலைபேசியில் பேசினேன். அவர் நம்பிக்கை இழக்கவில்லை. அதோடு ஒட்டுமொத்த விவகாரத்திலும் நேர்மறை அணுகுமுறையுடன் இருக்கிறார். வாழ்த்துக்கள் நண்பா…. இறையருள் உன் பக்கம் இருக்கட்டும்” என்று ட்வீட் செய்துள்ளார் தனுஷ்,

இதற்கு உடனடியாக பதில் ட்வீட் செய்துள்ள சிம்பு “உங்கள் அன்புக்கு நன்றி, வெளியாகவிருக்கும் தங்கள் படத்துக்கு வாழ்த்துக்கள்., கலக்குங்க” என்றிருக்கிறார்.

தனுஷ், சிம்புவின் இந்த நட்பும் அன்பும் மிகுந்த ட்வீட்களை ட்விட்டரில் இருக்கும் பலர் ரீட்வீட் செய்துவருகிறார்கள்.

தனுஷ் நடித்துள்ள 'மாரி' படம் அறிவிக்கப்பட்டபடி ஜூலை 17 அன்று வெளியாகவிருக்கிறது.

More News

'அஜீத் 56' படத்தின் டைட்டில்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் முடிவடைந்து தற்போது...

'வாலு' படத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை. ஜூலை 17-ல் ரீலீஸ் ஆவதில் சிக்கல்?

சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தடை செய்ய வேண்டும் என விநியோகிஸ்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையில்...

ஆகஸ்டில் தொடங்குகிறது ரஜினி-ரஞ்சித் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மலேசியாவில் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது.....

கமலுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த மாதவன்

ஒருபக்கம் இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் படமான 'பாகுபலி' ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்துள்ள நிலையில் குறுகிய கால தயாரிப்பும், மீடியம் பட்ஜெட் படமுமான 'பாபநாசம்' படமும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்துள்ளது. சிறப்பாக திரைக்கதை மற்றும் உலக நாயகனின் வித்தியாசமான நடிப்பே இந்த வெற்றிக்கு காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.....

இஞ்சி இடுப்பழகிக்காக 12 கிலோ எடை கூடிய அனுஷ்கா

முன்னணியில் இருக்கும் நடிகைகள் பொதுவாக தங்கள் உடலமைப்பை ஸ்லிம்மாக வைத்து கொள்ள தீவிர முயற்சிகள் எடுத்து கொள்வார்கள்......