'தலைவர் 170' படத்தில் இணையும் 'பாகுபலி', 'சார்பாட்டா பரம்பரை' நட்சத்திரங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 170’ படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றதாக தகவல் வெளியானது.
மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பகத் பாஸில் நடிக்க இருப்பதாகவும் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் நானி அல்லது சர்வானந்த் இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ’பாகுபலி’ படத்தில் நடித்த ராணா மற்றும் ‘சார்பாட்டா பரம்பரை' படத்தில் நடித்த துஷாரா விஜயன் ஆகிய இருவரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சில நட்சத்திரங்கள் இணைய இருப்பதாகவும் அந்த தகவல்கள் ஆச்சரியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்றும் முதல் கட்ட படப்பிடிப்பை 10 நாட்கள் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments