close
Choose your channels

அருண்விஜய்யின் மிரட்டலான நடிப்பில் 'வணங்கான்' டீசர்.. சூர்யா பார்த்தால் வருத்தப்படுவாரோ?

Monday, February 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிய ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆரம்பத்தில் இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்து சில வாரங்கள் படப்பிடிப்பும் நடைபெற்ற நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து சூர்யா விலகியதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகிய நிலையில் இந்த டீசரை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர். சேது, நந்தா, பிதாமகன் போன்ற படம் மாதிரி ‘வணங்கான்’ படத்தை பாலா செதுக்கி உள்ளார் என்றும் ஒவ்வொரு காட்சியும் மிரள வைக்கிறது என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அருண் விஜய்யின் கேரக்டர் ’பிதாமகன்’ விக்ரம் கேரக்டர் போல் இருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மொத்தத்தில் இந்த டீசரை சூர்யா பார்த்தால் இந்த படத்தில் இருந்து ஏன் விலகினோம் என்றும் வருத்தப்படும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக உள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos