ஆஜித்தின் புதிய முயற்சிக்கு நேரில் வந்து வாழ்த்திய பாலா-ஷிவானி!

ஆஜித்தின் புதிய முயற்சிக்கு நேரில் வந்து பாலாஜி, ஷிவானி உள்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது மட்டுமின்றி பிக்பாஸ் முடிந்த பின்னரும் இரண்டு குழுவாகவே போட்டியாளர்கள் இருந்துவருவதாக அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் பாலாவின் குரூப்பில் இருந்ததாக கூறப்படும் ஆஜித் தற்போது புதிய சவுண்ட் ரிக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்றை திறந்துள்ளார். சென்னை சூளைமேட்டில் அவர் தொடங்கியுள்ள ஏகே சவுண்ட் வொர்க் என்ற ஸ்டுடியோவின் திறப்பு விழாவிற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதில் பாலா, ஷிவானி, கேபி, சம்யுக்தா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஆஜித், தன்னுடைய ரிக்கார்டிங் ஸ்டுடியோ திறப்பு விழாவுக்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றும், இந்த புகைப்படத்தில் சுரேஷ் தாத்தா மிஸ்ஸிங் என்றாலும், அவரும் நேரில் வந்து வாழ்த்தினார் என்றும் அவருக்கு எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் பாலாவின் பக்கத்தில் ஷிவானி நிற்பது போன்று இருப்பதை அடுத்து நெட்டிசன்கள் வழக்கம் போல் தங்களது நக்கலான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

10 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ்ப்படத்தில் மல்லிகா ஷெராவத்!

பாலிவுட்டின் முன்னணி கவர்ச்சி நடிகையான மல்லிகா ஷெராவத் ஏற்கனவே கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசனின் 'தசாவதாரம்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

'தளபதி 65' படம் வந்ததும் 'கேஜிஎப்' படத்தை எல்லாரும் மறந்துருவிங்க: ஸ்டண்ட் இயக்குனர்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படமான 'தளபதி 65' திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் தெரிந்ததே 

எல்லோருடைய வாழ்க்கையிலும் கஷ்டம் கண்டிப்பா வேணும்: விஜே சித்ராவின் லேட்டஸ்ட் வீடியோ!

சின்னத்திரை நடிகை சித்ரா சமீபத்தில் தனியார் ரிசார்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என்ற குற்றச்சாட்டின்பேரில்

புதுச்சேரி அரசியலில் நடந்தது என்ன? பின்னணியை விளக்கும் அரசியல் பேட்டி!

புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட இருந்தது.

பந்து ஸ்விங் ஆவதைப் பற்றி கவலைப்பட வேண்டுமா? இந்தியக் கேப்டனின் அசத்தல் பேச்சு!

உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மொதேரா மைதானத்தில் முதல் சர்வதேசப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.