பாலாவின் 'வர்மா' ரிலீஸ் ஆகிறதா? பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Friday,February 28 2020]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த திரைப்படம் ‘வர்மா’. இந்த படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் திடீரென அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என தயாரிப்பு நிறுவனம் முடக்கி வைத்து விட்டு அதன் பின்னர் ’ஆதித்ய வர்மா’ என்ற படத்தை தயாரித்து கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்தப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்ற போதிலும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது

இந்த நிலையில் பாலாவின் ’வர்மா’ படமும் விரைவில் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியான நிலையில் தற்போது இது குறித்த இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. பாலா இயக்கிய ’வர்மா’ திரைப்படத்தின் சிங்கப்பூர் தணிக்கைச் சான்றிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ’வர்மா’ படத்தின் ரன்னிங் டைம் ஒரு மணி நேரம் 54 நிமிடங்கள் என்றும் சான்றிதழ் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதித்ய வர்மா’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 54 நிமிடங்கள் என்ற நிலையில் ஒரு மணி நேரம் குறைவாக ’வர்மா’ படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் 2020 ஆம் ஆண்டில் இந்த படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளதால் விரைவில் இந்த படம் சிங்கப்பூரில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வெளியானால் பாலாவின் ’வர்மா’ படத்திற்கும் ஆதித்யவர்மா’ இருக்கும் உள்ள வித்தியாசங்களை ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்!

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய கட்ட படப்பிடிப்பு கடந்த 19ஆம் தேதி சென்னையில் தொடங்கியது

அஜித்துக்காக எழுதப்பட்ட கதையா 'அண்ணாத்த'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'அண்ணாத்த'படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு

தாடி வைத்திருந்தால் கொரோனாவா??? அலறும் நெட்டிசன்கள்

உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தில&

ஜீவா படத்தை புரமோஷன் செய்யும் சூர்யா

நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகிய 'ஜிப்ஸி'திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து

மெக்கா செல்ல விரும்பும் பயணிகளுக்கு விசா வழங்கல் நிறுத்தம்

சவுதி அரேபியா அரசு மெக்கா செல்லும் பயணிகளுக்கான விசாவை நிறுத்தி வைத்துள்ளதாக நேற்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.