close
Choose your channels

பாலாவின் 'வர்மா' ரிலீஸ் ஆகிறதா? பரபரப்பு தகவல் 

Friday, February 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த திரைப்படம் ‘வர்மா’. இந்த படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் திடீரென அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என தயாரிப்பு நிறுவனம் முடக்கி வைத்து விட்டு அதன் பின்னர் ’ஆதித்ய வர்மா’ என்ற படத்தை தயாரித்து கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்தப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்ற போதிலும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது

இந்த நிலையில் பாலாவின் ’வர்மா’ படமும் விரைவில் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியான நிலையில் தற்போது இது குறித்த இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. பாலா இயக்கிய ’வர்மா’ திரைப்படத்தின் சிங்கப்பூர் தணிக்கைச் சான்றிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ’வர்மா’ படத்தின் ரன்னிங் டைம் ஒரு மணி நேரம் 54 நிமிடங்கள் என்றும் சான்றிதழ் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதித்ய வர்மா’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 54 நிமிடங்கள் என்ற நிலையில் ஒரு மணி நேரம் குறைவாக ’வர்மா’ படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் 2020 ஆம் ஆண்டில் இந்த படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளதால் விரைவில் இந்த படம் சிங்கப்பூரில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வெளியானால் பாலாவின் ’வர்மா’ படத்திற்கும் ஆதித்யவர்மா’ இருக்கும் உள்ள வித்தியாசங்களை ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.