யுவன்ஷங்கர் ராஜா பிறந்த நாளில் அஞ்சலி படக்குழுவினரின் அதிரடி கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Wednesday,August 23 2017]

இளம் இசைஞானி யுவன்ஷங்கர் ராஜாவின் பிறந்த நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வருவதை அடுத்து அவர் இசையமைத்துள்ள 'பலூன்' படக்குழுவினர் அன்றைய தினம் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

இதன்படி வரும் 28ஆம் தேதியே பிறந்த நாள் கொண்டாட்டங்களை துவக்கும் பலூன் படக்குழுவினர் அன்றையை தினம் புரமோ பாடல் ஒன்றையும், யுவன் பிறந்த நாளான ஆகஸ்ட் 31ஆம் தேதி 'பலூன்' படத்தின் ரொமான்ஸ் பாடல் ஒன்றையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள பலூன் படத்தை சினிஷ் இயக்கியுள்ளார். ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகிறது.

More News

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றி பட இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். நடிப்பு மட்டுமின்றி இசைத்துறையிலும் ஈடுபட்டு வரும் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே 'அடங்காதே', '4G', 'ஐங்கரன்', 'நாச்சியார்', 'செம', '100% காதல்', போன்ற படங்களில் நடித்து வருகிறார்...

அஜித் ஒரு இண்டீரியர் டிசைனர் என்பது யாருக்காவது தெரியுமா?

அஜித் ஒரு நடிகர், போட்டோகிராபர், பிரியாணி பிரியர், பைக் ரைடர் என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த இண்டீரியர் டிசைனர் என்பது பலருக்கு தெரியாத உண்மை...

நடிகை ராதிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாரிசும் பிரபல நடிகையுமான ராதிகாவுக்கு இன்று பிறந்த நாள். இன்றைய பிறந்த நாள் அவருக்கு சந்தோஷமான நாளாக இருக்க வேண்டும் என்று அவரை IndiaGlitz சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

வலிய வந்து வம்பில் மாட்டிக்கொண்ட காயத்ரி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டாலும் காயத்ரியை இன்னும் ஓவியா ஆர்மியினர் மன்னிக்கவும் இல்லை, மறக்கவும் இல்லை.

முதல்வரை மாற்ற வேண்டும்: சி.ஆர்.சரஸ்வதி

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் முதல்வரை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்வார்கள்...