close
Choose your channels

'கல்கி 2898 ஏடி' பட ரிலீசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரிலீஸாகும் கமல் படம்.. குஷியான அறிவிப்பு..!

Friday, June 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு கமல்ஹாசனின் சூப்பர் படம் ஒன்று ரீலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற மலையாள திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் சுமார் 250 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது ’குணா’ படத்தின் குகை மற்றும் ’குணா’ படத்தில் இடம்பெற்ற ’கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை அடுத்து ’குணா’ படத்தையும் ரீரிலீஸ் செய்ய வேண்டும் என்று கமல் ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது ’குணா’ திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் கதாநாயகனாகவும், கமல்ஹாசன் வில்லனாகவும் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு 6 நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் கிளாசிக் படமான ’குணா’ ரிலீஸ் ஆக உள்ளதை அடுத்து ஒரே வாரத்தில் கமல் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்க உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment