close
Choose your channels

பாரதிராஜா நடிப்பில் மனோஜ் இயக்கும் படம்: டைட்டில் லுக் ரிலீஸ்..!

Saturday, April 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிப்பில் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான 'தாஜ்மஹால்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அதன்பின் இவர் ‘சமுத்திரம்’ ’கடல் பூக்கள்’ ’அல்லி அர்ஜுனா’ ’வருஷமெல்லாம் வசந்தம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் கடந்த ஆண்டு வெளியான கார்த்தியின் ’விருமன்’, சிம்புவின் ‘மாநாடு’ ஆகிய திரைப்படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தை இயக்குவதன் மூலம் மனோஜ் பாரதிராஜா இயக்குனர் ஆக அறிமுகமாகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை பிரபல இயக்குனர் மிஷ்கின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்திற்கு ’மார்கழி திங்கள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் காஸ்டியூம் டிசைனராக வாசுகி பாஸ்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment