'KH234' போஸ்டரில் உள்ள பாரதியார் கவிதையை கவனித்தீர்களா?  என்ன சொல்ல வருகிறார் மணிரத்னம்?

  • IndiaGlitz, [Monday,November 06 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல்ஹாசன் 234’ திரைப்படத்தின் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று இந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த போஸ்டரில் மறைமுகமாக சில வரிகள் தலைகீழாக அதாவது மிரரில் இருந்து பார்க்கும் வகையில் உள்ளது. அதில் பாரதியார் கவிதை உள்ளது என்பதை நுணுக்கமாக பார்த்தால் கண்டுபிடிக்கலாம்.

காலா உனைநான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன் அட(காலா) என்ற பாரதியார் கவிதை தான் இதில் தலைகீழாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதியாரின் அந்த கவிதையின் முழு வடிவம் இதுதான்:

காலா உனைநான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன் அட(காலா)

வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன் நல்ல வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் துதிக்கிறேன் ஆதி

மூலா வென்றுாகதறிய யானையைக் காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே ? அட (காலா)

ஆலாலமுண்டவனடி சரணென்றமார்க்கண்ன் தன தாவி கவரப்போய் நீ பட்டபாட்டினை யறிகுவேன் இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல் உனைவிதிக்கிறேன் ஹரி நாராயண னாநின் முன்னே உதிக்கிறேன் அட(காலா)

இந்த கவிதை மூலம் இயக்குனர் மணிரத்னம் கமல்ஹாசனின் கேரக்டரை மறைமுகமாக தெரிவித்துள்ளாரா? என்பது இன்று மாலை வெளியாகும் டைட்டில் போஸ்டரில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சமில்லை: கமலுக்கு வாழ்த்து கூறிய சீனியர் நடிகர்..!

நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாக தெரியவில்லை என சீனியர் நடிகர் ஒருவர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்மால் ஹவுஸ் வீட்டுக்கு மாயா அனுப்பிய 6 போட்டியாளர்கள்.. பக்கா பிளானா?

இந்த வார கேப்டனாக மாயா தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் 6 போட்டியாளர்களை தேர்வு செய்து ஸ்மால் ஹவுஸ் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.  

இன்று வெளியாகும் கமல்-மணிரத்னம் படத்தின் டைட்டில் இதுதானா? மாஸ் தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் 'கமல் 234'. இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் சமீபத்தில் இந்த படத்தின்

சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தில் இணையும் பிரபல இயக்குனர்: வெற்றிமாறன் அறிவிப்பு..!

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் ஒருவர்

பிரதீப் வெளியேற்றம் குறித்து பிக்பாஸ் கருத்து: அதிர்ச்சியில் மாயா-பூர்ணிமா கேங்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் அனுப்பப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.