நடிகை பாவனாவின் கார் வழிமறிக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

சித்திரம் பேசுதடி, அசல், ஜெயங்கொண்டான் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. இவர் நேற்றிரவு தனது காரில் கொச்சியில் இருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்து கார் ஓட்டுனரை பயமுறுத்தி வலுக்கட்டாயமாக காரினுள் நுழைந்தது.

பின்னர் பாவனாவிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் கார் பளரிவட்டம் என்ற பகுதிக்கு வந்த போது காரில் இருந்த மர்ம கும்பல் இறங்கி ஓடிவிட்டனர்.

இந்நிலையில் பாவனா அந்த பகுதியில் இருந்த இயக்குனர் ஒருவர் வீட்டில் அடைக்கலம் புகுந்தார். இதுகுறித்து காவல்துறையினர்களிடம் பாவனா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாவனாவின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் பாவனாவின் முன்னாள் கார் டிரைவரை போலீசார் தேடி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

சபாநாயகர் தனபால் வேண்டுமென்றே சட்டையைக் கிழித்துக்கொண்டார்: மு.க.ஸ்டாலின்

சட்டை கிழிந்த நிலையில் சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தான் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் காவல்துறையினர்களாl தாக்கப்பட்டதாக கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி அரசு. ஆதரவு 122, எதிர்ப்பு 11

திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் வெளியேற்றத்திற்கு பின்னர் சற்றுமுன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

சபாநாயகர் சரியாக செயல்படவில்லை. மார்க்கண்டேய கட்ஜூ

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அரசுக்கு நம்பிக்கை வாக்கு கோரியதால் கூட்டப்பட்ட சட்டசபை பெரும் அமளியாகியுள்ளது

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததும் சற்றுமுன் நடந்த சம்பவங்களாக இருந்த நிலையில் சற்றுமுன் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் வெளியேற்றம். சட்டை கிழிந்திருந்ததால் பரபரப்பு

சபாநாயகரின் உத்தரவை அடுத்து திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டுள்ளார்.