நாசமா போகட்டும்: பிரபல இயக்குனரின் விரக்தி பதிவு!

  • IndiaGlitz, [Wednesday,January 20 2021]

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என தமிழ் இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விரக்தியாக பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் இயக்குனர் லட்சுமண் இயக்கிய திரைப்படம் ’பூமி’. இந்த படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசானது என்பதும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 'பூமி' படம் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், இதுவரை நான் பார்த்த படங்களில் 'பூமி' போன்ற ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை என்றும், 'சுறா', 'ஆழ்வார்', 'அஞ்சான்', 'ராஜபாட்டை' வரிசையில் இந்த படம் இருந்ததாகவும், இந்த படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை எதுவுமே சரியாக இல்லை என்றும், இயக்குநர் லட்சுமணுடன் பணிபுரிவதை நிறுத்துங்கள் ஜெயம் ரவி என்றும் தெரிவித்து இருந்தார்

ரசிகரின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் இயக்குனர் லட்சுமண், ‘சார். நம்ம எதிர்காலத் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படம் எடுத்தேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். ‘ரோமியோ ஜூலியட்’ எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். சகோதரரே, நீங்க சிறப்பு, ஜெயிச்சிட்டீங்க. நான் தோத்துட்டேன் என்று விரக்தியுடன் பதிவு செய்துள்ளார். இயக்குனர் லட்சுமணன் பதிவு செய்துள்ள இந்த டுவீட்டுக்கு கண்டனங்களும் ஆறுதல்களையும் ரசிகர்கள் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.

More News

சிம்புவின் ஆட்டத்தை பார்க்க வெயிட்டிங்: பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி!

சிம்புவின் ஆட்டத்தைப் பார்க்க தான் காத்திருப்பதாக பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது 

ரூ.25 கோடி நஷ்ட ஈடு: 'மாஸ்டர்' தயாரிப்பாளர் அனுப்பிய நோட்டீஸால் பரபரப்பு!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் அவர்கள் ரூபாய் 25 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடியாக சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டுவிட்டரில் இணைந்த தமிழ் நடிகையின் மகள்: முதல் பதிவில் தளபதி விஜய்

தமிழ் திரை உலகினர் உள்பட உலகில் உள்ள முக்கிய செலிபிரிட்டிகள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்து இருப்பார்கள் என்பதும் தாங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள்

பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட அந்த வார்த்தை தவறு: ஜேம்ஸ் வசந்தன்

பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி ஒரு வார்த்தை பயன்படுத்தப்பட்டதாகவும் அப்படி ஒரு வார்த்தையே இல்லை என்றும் அந்த வார்த்தை தவறு என்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்