கார் விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்… மருத்துவமனையில் அனுமதி!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ் 11 ஆவது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை அர்ஷிகான். நடிகையும் மாடலுமான இவர் நேற்று டெல்லி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்தில் சிக்கியதாகவும் இதனால் சிறுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தி பிக்பாஸ் 11 ஆவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான அர்ஷிகான், பின்னர் 14 ஆவது சீசன் போட்டியின்போது வைல்கார்டு எண்ட்ரி மூலம் கலந்துகொண்டார். பிரபலமான இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். அதோடு மல்யுத்தத்திலும் நடிகை அர்ஷகான் கவனம் செலுத்திவருகிறார்.
இந்நிலையில் நேற்று படப்பிடிப்பில் கலந்துகொண்டு டெல்லி அடுத்த மாள்வியா நகர் ஷிவாலிசான் சாலையில் அவர்சென்ற கார் விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்தில் சிறுகாயம் அடைந்த அர்ஷிகான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அர்ஷிகான் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments