close
Choose your channels

அசீமின் வெற்றி மோசமான முன்னுதாரணம்.. சக பெண் போட்டியாளரின் பதிவால் பரபரப்பு!

Tuesday, January 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீமின் வெற்றி ஒரு தவறான முன்னுதாரணம் என பிரபல ஊடகம் ஒன்றின் பதிவை அசீமின் சக போட்டியாளரே பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான விஜே மஹேஸ்வரி தைரியமான போட்டியாளர் என்றும் தன் மனதில் தோன்றியதை சக போட்டியாளர்களிடம் கூறுவதில் அவர் மிகவும் சிறப்பானவர் என்றும் போற்றப்பட்டு வந்தார்.

குறிப்பாக அசீமுடன் அவர் நேருக்கு நேர் மோதினார் என்பதும் போட்டி நாட்களில் மட்டுமின்றி விருந்தினராக சென்றபோதும் கூட அவர் அசீமுடன் சண்டை போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விக்ரமனுடன் அவருக்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவரது நல்ல குணங்களை பாராட்டும் குணத்தை கொண்டவர் என்பதால் அவர் விக்ரமனின் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக அசீம் வெற்றி பெற்றது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இது குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முன்னணி ஊடகம் ஒன்று அசீமுக்கு டைட்டில் பட்டம் கொடுத்தது தவறான முன்னுதாரணம் என்று பதிவு செய்யப்பட்ட கட்டுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜே மஹேஸ்வரி பகிர்ந்து உள்ளார்.

பிக் பாஸ் பார்வையாளர்களின் மனதை உள்ளதை தைரியமாக நீங்கள் வெளிப்படுத்தி உள்ளீர்கள் என மகேஸ்வரிக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும் அசிமின் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.