எனக்கும் லவ் இருக்கு! உளறி கொட்டிய காயத்ரி

  • IndiaGlitz, [Saturday,August 19 2017]

பிக்பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் அதற்கு காரணமாகவோ அல்லது பின்னணியிலோ காயத்ரி இருப்பார் என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு தெரியும். ஆனால் சக்தி வெளியேறியதில் இருந்தே அவர் சண்டையை தவிர்த்து வருகிறார். அதுமட்டுமின்றி நேற்றைய நிகழ்ச்சியில் ஆரவ், சினேகன் குறித்து கோபமாக பேசியபோது அவரை சமாதானப்படுத்தவும் செய்தார். காயத்ரியின் கேரக்டர் இது இல்லையே என்று பார்வையாளர்கள் தான் குழப்பம் அடைகின்றனர்.
இந்த நிலையில் காயத்ரியின் இந்த புதிய மாற்றத்திற்கு அவருடைய காதல் தான் காரணமாக இருக்குமோ என்று தெரியவருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் 'சக்தியோட சேர்த்து என்னையும் அனுப்பியிருக்கலாம். இனி இங்கே என்னால் தங்க முடியாது. மத்தவங்க லவ் ஸ்டோரிய கேட்கறதுக்கு பதில் என் லவ் ஸ்டோரியைப் பார்க்கப் போகலாம்' என்று காயத்ரி புலம்பியது அவரது புதிய காதலை ஊர்ஜிதம் செய்கிறது.
இந்த வாரம் என்னை அனுப்பிடுங்க, இல்லைன்னா அழுதுருவே என்று காயத்ரி கூறியதில் இருந்தே இனிமேலும் காதலனை அவர் பிரிந்திருக்க முடியாதோ என்ற அர்த்ததில் எடுத்து கொள்ள தோணுகிறது. மேலும் சக்தி வெளியேறிய பின்னர்தான் காயத்ரிக்கு தனது காதலின் பிரிவு குறித்த வருத்தம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

95% திரையரங்குகளில் 'விவேகம்' ரிலீஸ்! புதிய சாதனை ஏற்படுத்துமா?

தல அஜித், காஜல் அகர்வா, அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் நடிப்பில் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது

மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' ஆடியோ விழாவில் ரஜினி?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்த முதல் நேரடி தமிழ் திரைப்படமான 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த வருட இறுதியில் வெளியாக தயாராகி வருகிறது

ரஜினியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்த போது விரைவில் அரசியலுக்கு வரவிருப்பதை மறைமுகமாக தெரிவித்தார்.

களத்தூர் கிராமத்தின் ஹீரோவாக மாறிய இசைஞானி

இசைஞானி இளையராஜாவின் இசை பல திரைப்படங்களுக்கு ஹீரோவாக இருந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

சிவகார்த்திகேயன் தந்தையாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...