close
Choose your channels

95% திரையரங்குகளில் 'விவேகம்' ரிலீஸ்! புதிய சாதனை ஏற்படுத்துமா?

Saturday, August 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித், காஜல் அகர்வா, அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் நடிப்பில் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது. சென்னை உள்பட பலநகரங்களில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக டிக்கெட்டுக்கள் புக் ஆகி வருகிறது
இந்த நிலையில் தமிழகத்தில் 'விவேகம்' ரிலீஸ் புதிய சாதனையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 1090 திரையரங்குகள் இயங்கி வரும் நிலையில் அவற்றில் சுமார் 900 திரையரங்குகளுக்கும் அதிகமாக 'விவேகம்' திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி உண்மை என்றால் 'விவேகம்' படத்தின் ஓப்பனிங் வசூல் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலும், தமிழகத்திலும் அதிக வசூல் என்ற சாதனையை வைத்துள்ள 'பாகுபலி 2' படத்தின் சாதனையை 'விவேகம்' முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.