உங்க நேர்மைக்கு கிடைத்த பரிசு: ஓவியாவுக்கு கமல் பாராட்டு

  • IndiaGlitz, [Sunday,July 23 2017]

பிக்பாஸ் வீட்டில் நேற்று முன் தினம் அனைத்து பங்கேற்பாளர்களும் ஒன்று சேர்ந்த்து ஓவியாவை விரட்ட சதித்திட்டம் தீட்டினார்கள். ஆனால் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் தர்மமே வெல்லும் என்ற மொழிக்கேற்ப நேற்று ஓவியா நிரபராதி என்பதை குறும்படம் மூலம் போட்டுக்காட்டி ஜூலியின் பச்சோந்திதனத்தை கமல் அம்பலப்படுத்தினார்.

நேற்று கமலிடம் ஓவியாவை பற்றி அனனத்து பங்கேற்பாளர்களும் புகார் கூறிய நிலையில் அவர் ஒரு குறும்படத்தை ஒளிபரப்பினார். அதில் ஜூலிதான் மாறி மாறி பேசினார் என்பதும், சின்ன பிரச்சனையை ஊதி ஊதி பெரிதாக்கியுள்ளார் என்பதும் ஓவியா அவருக்கு ஆறுதல் மட்டுமே கூறியுள்ளார் என்பதும், யாரையும் அவர் புறம்கூறவில்லை என்பதும் புரிய வந்தது.

இதனால் அனைத்து பங்கேற்பாளர்களும் ஜூலியின் சுயரூபத்தை புரிந்து கொண்டனர். ஓவியா உண்மையானவர் தான் என்பதை காயத்ரி, நமீதா உள்பட அனைவரும் கமல் முன் ஒப்புக்கொண்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஓவியாவிடம் 'இது உங்கள் நேர்மைக்கு கிடைத்த பரிசு' என்று பாராட்டியதோடு, இருப்பினும் இந்த பாராட்டை நீங்கள் தலையில் ஏற்றி கொள்ளாமல் முடிந்தவரை மற்றவர் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்' என்று அறிவுரை கூறினார்.

More News

கமல் கண்ணில் கோபத்தை வரவழைத்த ஜூலியின் பொய் வாக்குமூலம்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி வயிற்று வலியால் துடித்தபோது, 'நீ நடிக்கிறாய்ன்னு காயத்ரியும் நமீதாவும் சொல்றாங்க' என்று ஓவியா சொன்னதாக ஜூலி கமல்ஹாசனிடம் குற்றம் சுமத்தினார்...

அங்கதான் தல நிக்கிறாரு! அனிருத் ஆச்சரியம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த 'விவேகம்' படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்தில் பணிபுரிவது குறித்து கூறியபோது, 'சர்வைவா மற்றும் தலை விடுதலை பாடல்கள் வெளிவந்தபோது எனக்கு கிடைத்த பாராட்டுக்கள்...

சூர்யாவுக்கு 25வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய விக்னேஷ் சிவன்

பிரபல நடிகர் சூர்யா இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு குடும்பத்தினர்களும், நண்பர்களும் திரையுலகினர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். சூர்யாவுக்கு எங்களுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்....

இந்த நூற்றாண்டின் மார்க்கண்டேயன் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சூர்யா இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

பச்சோந்தி ஜூலியின் தோலை உரித்த கமல்

பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஜூலி பங்கேற்கிறார் என்றவுடன் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது...