சினேகன் தந்திரக்காரர் மட்டுமே! தைரியசாலி இல்லை: காஜல்

  • IndiaGlitz, [Tuesday,September 05 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய காஜல், வெளியே வந்த பின்னர் அளித்த பேட்டியில் சினேகன் குறித்துதான் அதிகம் குறைகூறியுள்ளார்.

சினேகன் எப்போதுமே மற்றவர்களின் முதுகுக்கு பின்னால் மட்டுமே புறம் பேசுபவர் என்றும், மக்கள் முன்பும் சரி, பங்கேற்பாளர்கள் முன்பும் சரி தைரியமாக பேச மாட்டார் என்றும் கூறியுள்ளார். அதனால் தான் அவர் இவ்வளவு நாட்களாக அந்த வீட்டில் தாக்கு பிடித்து வருவதாக கூறிய காஜல், நான் முதல் நாளில் இருந்தே சினேகனுக்கு தான் குறி வைத்தேன், ஆனால் அவர் தந்திரமாக தப்பித்துவிட்டார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பலர் நினைப்பது போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்கிரிப்ட் எல்லாம் இல்லை என்றும், அவ்வாறு சிலர் நினைப்பது தவறு என்றும் கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டுமானால் போலியாக நடிக்க வேண்டியது உள்ளதாகவும், அவ்வாறு தன்னால் நடிக்க முடியாது என்பதால் தான் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

நான் ஏன் கெட்டவனாக மாறினேன்: ஜூலியிடம் சினேகன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 71வது நாளை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று புதிய தலைவரும், எவிக்சன் நாமினேசனும் நடந்தது. புதிய தலைவராக வையாபுரி தேர்வு செய்யப்பட்டார்...

அருண்ராஜா காமராஜ் கிரிக்கெட் படத்தில் பிரபல கிரிக்கெட் வீராங்கனை

பாடகர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் பெண்கள் கிரிக்கெட் குறித்த ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த ஆடிசன் நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஓவியாவின் ஒற்றை வரி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட ஓவியாவுக்கு ஆதரவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த ஒரு டுவிட்டர் பதிவுக்கு முன்னணி நடிகர்களின் பதிவுகளை விட அதிக வரவேற்பு இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம்: நீதிமன்றம் உத்தரவு

வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டினர் உரிமை வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த நடைமுறை செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தவறும் பட்சத்தில் ரூ.500 அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் இதனை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன் சென்ன

கமல்ஹாசனை சந்தித்த பிரபல நடிகை-அரசியல்வாதி

உலக நாயகன் கமல்ஹாசனின் பயணம் கடந்த சில மாதங்களாகவே அரசியல் நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது.