ஷிவினுக்கு மொட்டை அடிக்க வேண்டுமாம்... சொன்னது யாரு பாருங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவினுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என சக போட்டியாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் தற்போது உள்ள போட்டியாளர்களில் மிகவும் சிறப்பாக விளையாடி வருவது விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவர் மட்டுமே என்றும் இருவரும் கண்டிப்பாக இறுதிப்போட்டி வரை செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.

ஷிவின் நேர்மையாகவும் மனதில் பட்டதைத் தைரியமாகச் சொல்லும் கேரக்டராக இருப்பதால் அவரை கிட்டத்தட்ட அனைவருக்குமே பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே ஒரிரு முறை ஷிவனை அவமரியாதை செய்யும் வகையில் பேசிய அசீம், தற்போது மீண்டும் ஒரு முறை அவ்வாறு பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, கதிரவன் மற்றும் மணிகண்டனிடம் அசீம் கூறும்போது, ‘பேசாமல் ஷிவினுக்கு மொட்டையடித்து விடுவோமா? என்று கூறுகிறார். அவரது இந்த பேச்சுக்கு கதிரவன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருமே பதில் கூறாமல் அமைதியாக உள்ளனர்.

ஒரு திருநங்கை போட்டியாளரை மொட்டை அடிக்க வேண்டும் என அநாகரிகமாக பேசிய அசீமுக்கு பார்வையாளர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

'வாரிசு' எங்களிடம் இல்லை என்றாலும் விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்: உதயநிதி

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை நாங்கள் வாங்கவில்லை என்றாலும் விஜய் அண்ணாவுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டேஞ்சர் ஜோனில் இருக்கும் நால்வர்: இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே .

பிறந்த நாள் வாழ்த்துக்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா....!

திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் மிகவும் பெருமைக்குரியது என்பதும் ரசிகர்களால் அழைக்கப்படும் இந்த பட்டம் ரஜினிகாந்த் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டு வந்தது. 

சூடேற்றிய அசீம்.. ஆவேசமான ஏடிகே.. இன்னிக்கு செம எண்டர்டெயின்மெண்ட் இருக்கு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த 40 நாட்களில் ஒரு சில நாட்கள் தவிர தினந்தோறும் அசீம் ஒரு சக போட்டியாளர் உடன் சண்டை போட்டு வருகிறார்.

'வணங்கான்' பிரச்சனை குறித்து மனம் திறந்த பாலா.. என்ன சொன்னார் தெரியுமா?

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'வணங்கான்'. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடைபெற்ற