close
Choose your channels

பிறந்த நாள் வாழ்த்துக்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா....!

Friday, November 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் மிகவும் பெருமைக்குரியது என்பதும் ரசிகர்களால் அழைக்கப்படும் இந்த பட்டம் ரஜினிகாந்த் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரசிகர்களால் பெற்றுள்ள நயன்தாரா திரையுலகில் பல சாதனை செய்து வரும் நிலையில் அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சரத்குமார் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ’அய்யா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது படம் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினியுடன் அவர் நடித்த ’சந்திரமுகி’ படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது.

அதன்பின்னர் விஜய்யுடன் ’சிவகாசி’ சூர்யாவுடன் ’கஜினி’ சிம்புவுடன் ’வல்லவன்’ அஜீத்துடன் ’பில்லா’, தனுஷூடன் ‘யாரடி நீ மோகினி’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக அவர் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் 38 வயதிலும் அவர் தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக பிஸியான நடிகையாக உள்ளார் என்பதும் ’ஜவான்’ உள்பட கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று உள்ளார்.

இந்த நிலையில் இன்றைய பிறந்த நாளில் அவர் மென்மேலும் திரைஉலகில் மேலும் பல சாதனைகள் செய்ய திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறிவரும் நிலையில் நம்முடைய வாழ்த்துக்களையும் மீண்டும் நயன்தாராவுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.